யாழ் பல்கலையில் நூல் அறிமுகவிழா தடை: கருத்துச் சுதந்திரக் கேள்வி

மு.திருநாவுக்கரசு எழுதிய 'இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும்' என்ற நூலின் அறிமுகவிழா ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையினரின் ஏற்பாட்டில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த நிலையில், ஒக்டோபர் 28 ஆம் திகதி அந்நூலுக்கான அறிமுக நிகழ்வு தடுக்கப்பட்டது. நூல் வெளியீட்டிற்கான தடை என்பது ஈழத் தமிழரின் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தடை என எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு கல்வி மற்றும் மனித உரிமை வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



