வவுனியா: அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட 30 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றல்

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி, சுகாதார வசதிகளின்றி முறையான அனுமதி பெறாது கொண்டுவரப்பட்ட மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாநகர சபையின் சுகாதாரப் பரிசோதகர்கள் வியாழக்கிழமை (06.11.2026) மேற்கொண்ட சோதனையில் 30 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இக்கைப்பற்றல் இடம்பெற்றது.



