IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

பேருந்து பயணக் கட்டணம் வங்கி அட்டையில்: ஆறு மாதங்களுக்குள் அமுலுக்கு

பேருந்து பயணக் கட்டணம் வங்கி அட்டையில்: ஆறு மாதங்களுக்குள் அமுலுக்கு
பேருந்து பயணக் கட்டணம் வங்கி அட்டையில்: ஆறு மாதங்களுக்குள் அமுலுக்கு படம்: Jakub Hałun (CC BY 4.0)

பொது பயணிகள் பேருந்துகளில் வங்கி அட்டைகள் (Credit Card / Debit Card) மூலம் பயணக் கட்டணம் செலுத்தும் முறை அடுத்த ஆறு மாதங்களுக்குள் அமுலுக்கு வரும் என இலங்கை தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

பயணங்களின் போது நடத்துநர்களிடம் மீதமுள்ள ரூ. 2, 5, 10 போன்ற சில்லறைப் பணம் கிடைப்பதில்லை என்ற பயணிகளின் முறைப்பாடுகளும், அதனால் ஏற்படும் வாக்குவாதங்களைத் தடுக்கும் நோக்கமும் இந்நடவடிக்கைக்கு அடிப்படை என ஆணையம் குறிப்பிட்டுள்ளது. முன்னோட்டத் திட்டம் நிறைவடைந்துவிட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

வங்கி அட்டைகள் ஊடாகப் பேருந்துக் கட்டணம் செலுத்தும் வசதியை வழங்குவதற்கு ஏழு தனியார் மற்றும் அரச வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.