புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: கத்தோலிக்க திருச்சபை ஆய்வு

அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (Protection of the State from Terrorism Act) தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை ஆய்வு மேற்கொண்டு வருவதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இழுத்து மூடி புதிய சட்டம் கொண்டுவரப்படும் நிலையில், அதன் விதிகள் மனித உரிமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வே இதன் நோக்கம்.



