IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

கொழும்பு வெள்ளம்: அரசாங்கத்தின் மீது பாடகர் இராஜ் வீரரத்ன விமர்சனம்

கொழும்பு வெள்ளம்: அரசாங்கத்தின் மீது பாடகர் இராஜ் வீரரத்ன விமர்சனம்
கொழும்பு வெள்ளம்: அரசாங்கத்தின் மீது பாடகர் இராஜ் வீரரத்ன விமர்சனம் படம்: mckaysavage (CC BY 2.0)

வியாழக்கிழமை (06.11.2026) கொழும்பில் பெய்த அடைமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்நிலை தொடர்பில் பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன, கொழும்பின் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்த வேளையில் அரசாங்கத்திற்கு எதிராகப் பாடலொன்றைப் பாடி விமர்சனம் முன்வைத்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வெள்ள நீர் முகாமைத்துவம் சிறப்பாக இருந்ததாகவும், தற்போது சிறிய மழைக்குக் கூட வெள்ளம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.