விலங்கு மூளைக்குள் மனித நியூரன்கள்: Stanford-இன் "alien-cortical mice" ஆய்வு

அமெரிக்காவின் California-வில் உள்ள ஆய்வகம் ஒன்றில், சுண்டெலிகள் வழக்கம்போல் வளையங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன; ஆனால் அவற்றின் மூளைகளுக்குள் இலட்சக்கணக்கான செயல்படும் மனித நியூரன்கள் உள்ளன. மூளையின் புறணி (cerebral cortex) உட்படச் சில பகுதிகள் இல்லாதவாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட சுண்டெலிகளுக்குள், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட மனிதக் கலங்களைப் பொருத்தியுள்ளனர் Stanford பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
Nature இதழில் வெளியான ஆய்வின்படி, "alien-cortical mice" என அழைக்கப்படும் இவை schizophrenia, cerebral palsy மற்றும் dementia போன்ற மூளைச் சுற்றுகள் மற்றும் கோளாறுகளை ஆராய்வதற்குப் புதிய வழியை வழங்கக்கூடும்.
நகர்வு, கற்றல் மற்றும் நினைவுக்குத் தேவையான cerebral cortex மற்றும் hippocampus-இன் பெரும் பகுதி இன்றிப் பிறக்குமாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட சுண்டெலிகளுக்கு, இரண்டு நாள் வயதில் stem கலங்களிலிருந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட சிறு கலக்கூட்டங்களான "organoid"-கள் செலுத்தப்பட்டன. மனித மூளைத் திசுக்களை விலங்குக்குள் வைப்பது அறிவியல் கற்பனை போலத் தோன்றினாலும், இவ்வாய்வு மருத்துவ ஆராய்ச்சிக்குப் புதிய எல்லையைத் திறக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



