இத்தாலிய வெளியுறவு அமைச்சரின் தனிப்பட்ட தரவுகள் dark web-இல்: Russia சார்பு குழுவினர் மீது குற்றச்சாட்டு

இத்தாலிய துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான Antonio Tajani-யின் தனிப்பட்ட தரவுகள் dark web-இல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சனிக்கிழமை சமூக ஊடகப் பதிவொன்றில் தெரிவித்தார். "பல நாட்களாக cyber குற்றவாளிகள் எனது தனிப்பட்ட தரவுகளை dark web-இல் வெளியிட்டு, மேலதிக தகவல்களைத் தேடி வருகின்றனர்; இது என்னைப் புதிய அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் உள்ளாக்குகிறது" என அவர் குறிப்பிட்டார்.
"எனது குடும்பத்தினரையும் இலக்கு வைக்கின்றனர்; என்னைப் பற்றியும் என் அன்புக்குரியவர்கள் பற்றியும் மேலும் விபரங்களுக்குப் பணம் கொடுக்கவும் தயாராக உள்ளனர். எனது பதில் எளிது: நான் எவ்விதத்திலும் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.
Russia சார்பு hacker குழுக்களின் செயற்பாடுகள் குறித்த வெளிப்பாடுகளைத் தொடர்ந்து Tajani-வுடன் ஒற்றுமை தெரிவித்த இத்தாலிய பிரதமர் Giorgia Meloni, அரசு அதிகாரிகளின் இரகசியத் தகவல்களை விற்பனை செய்யும் முயற்சிகள் கடும் அவதானம் செலுத்தப்பட வேண்டிய கவலைக்குரிய விடயம் என்றார். ஐரோப்பா முழுவதும் போலிக் குண்டு மிரட்டல்கள், விமானத் திசை மாற்றங்கள் உட்படச் சமீபத்திய சம்பவங்களின் பின்னணியில் இம்மிரட்டல் ஏற்பட்டுள்ளது.



