குருணாகலில் வீட்டுரிமையாளர் வெட்டிக்கொலை; மனைவி, மகள் படுகாயம்

குருணாகல் - வாரியப்பொல, ஹல்மில்லேவ பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (07) அதிகாலை இடம்பெற்ற கூர்மையான ஆயுதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த நபர், வீட்டுரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவரது மனைவி மற்றும் மகள் மீதும் தாக்குதல் நடத்தியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் 56 வயதான வீட்டுரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மனைவி மற்றும் மகள் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.



