IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

தோட்டத் தரிசு நிலங்கள் தனியாருக்கு மட்டுமே ஏன்? மனோ கணேசன் கேள்வி

தோட்டத் தரிசு நிலங்கள் தனியாருக்கு மட்டுமே ஏன்? மனோ கணேசன் கேள்வி
தோட்டத் தரிசு நிலங்கள் தனியாருக்கு மட்டுமே ஏன்? மனோ கணேசன் கேள்வி படம்: Lapmaster (CC BY-SA 4.0)

பெருந்தோட்டத் தரிசு நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்க முடியும் என்றால், அதே காணிகளைப் பெருந்தோட்டப் பிரதேசங்களில் வாழும் காணியற்ற ஏழை மலையக மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடியாதது ஏன் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். மலையகத் தரிசு நிலப் பிரச்சினை குறித்து அரசின் நிலைப்பாட்டை விமர்சித்த அவர், யாரை ஏமாற்ற முயல்கிறீர்கள் எனக் கடுமையாக வினவியுள்ளார்.