கிரிஷ் விவகாரம்: நாமல் ராஜபக்சவின் கையெழுத்து ஆவணங்கள் பகுப்பாய்வுக்கு

சர்ச்சைக்குரிய கிரிஷ் சொத்துப் பரிவர்த்தனை தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கையெழுத்து அடங்கிய ஆவணங்கள் அரசாங்க பகுப்பாய்வாளரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (06) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இத்தகவல் வெளிப்பட்டது.



