சபாநாயகருக்கு எதிரான பிரேரணை: சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்படவில்லை

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்படுவதாக ஆளும் தரப்பினர் கூறிய போதிலும், இதுவரை அத்தகைய ஆலோசனை எதுவும் கோரப்படவில்லை என களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (06.11.2026) உரையாற்றிய அவர், அரசுக்குச் சார்பான சில தனியார் சட்டத்தரணிகளிடம் பெறப்படும் கருத்துக்களை சட்டமா அதிபரின் உத்தியோகபூர்வ ஆலோசனையாக எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.



