பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளம் பெண் நடத்துநர் சிகிச்சை பலனின்றி பலி

தெலங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழக (TGSRTC) பேருந்தொன்றில் நடத்துநராகப் பணியாற்றிய இளம் பெண் Pravalika, பெண் பயணி ஒருவரால் தாக்கப்பட்டுப் பேருந்தில் இருந்து விழுந்து காயமடைந்து, சிகிச்சை பலனின்றி நவம்பர் 3ஆம் திகதி உயிரிழந்ததாக அவரது தாயார் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 25ஆம் திகதி Bhadrachalam நோக்கிச் சென்ற பேருந்தில் சில்லறைத் தகராறில் Pravalika தாக்கப்பட்டு கீழே விழுந்தார். மணுகூர் பணிமனையைச் சேர்ந்த அவர், பாதுகாப்பு அறிவிப்பு வெளியிட்ட காணொளி ஒன்றின் மூலம் சமூக ஊடகங்களில் அறியப்பட்டவர்; அவரை நினைவுகூர்ந்து பலர் இப்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது தந்தையும் RTC ஊழியராகப் பணியாற்றியவர்; சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் பணியில் இருக்கும்போதே உயிரிழந்ததைத் தொடர்ந்து கருணை அடிப்படையிலான நியமனத் திட்டத்தில் Pravalika-வுக்கு நடத்துநர் பணி வழங்கப்பட்டது. தற்போது மகளையும் இழந்த தாயார் தனித்து விடப்பட்டுள்ளார்.



