IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

தாய்லாந்தில் 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்தத் திட்டம்

தாய்லாந்தில் 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்தத் திட்டம்
தாய்லாந்தில் 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்தத் திட்டம் படம்: User:Diliff (CC BY-SA 3.0)

தொழிலாளர் வெற்றிடங்களைச் சமாளிக்கும் நோக்கில், இலங்கையிலிருந்து ஆரம்பகட்டமாக 10,000 தொழிலாளர்களைப் பணியமர்த்த தாய்லாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையிலிருந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு வெளிநாட்டுத் தொழிலாளர் முகாமைத்துவக் கொள்கைக் குழு நவம்பர் 6 அன்று அனுமதி வழங்கியதாக தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் Julapun Amornvivat தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் தாய்லாந்து இடையே கைச்சாத்திடப்பட்ட தொழிலாளர் ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. தொழிலாளர் ஆட்சேர்ப்பு, வேலை ஒப்பந்தங்கள், மருத்துவப் பரிசோதனைகள், தொழிலாளர்களை மீண்டும் தாயகம் அனுப்புதல் ஆகிய நடைமுறைகள் இதன்கீழ் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன; சட்டவிரோத ஆட்சேர்ப்பு மற்றும் மனிதக் கடத்தலைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உள்ளடங்கும்.